“அத்தனை சிறிய சிறுமிக்கும்
தனி இருக்கை பதிவு செய்திருந்தார்கள்
ரயில் பெட்டியில்.
அவள் அங்கு உட்காராமல்
பெட்டி முழுவதும்
பறந்து திரிந்து கொண்டிருந்தாள்.
எல்லா இருக்கைகளும் நிரம்பி
அவள் இடம் மட்டும்
காலியாக இருந்தது
பயணம் முழுவதும்.
அந்தப் பெட்டியே
முன் பல் விழுந்த
அவளது சிரிப்பைப் போல
தோற்றமளித்தது..!”
- முகுந்த் நாகராஜன்.
No comments:
Post a Comment