“நகரத்து ஹாஸ்டலில்
தங்கி படிக்கும் மகளின்
முதலாம் ஆண்டு செமஸ்டர்
விடுமுறைக்காக
காத்திருக்கிறார்கள்
கிராமத்து வீட்டில்
அப்பாவும், அம்மாவும்...
மகளுக்கு பிடிக்குமே என்று
யாஷிகா கேமராவில்
அப்பா எடுத்த
புகைப்படம் சொல்லும்
பூவுக்கும்
வண்ணத்துப்பூச்சிக்குமான
காதலை...
மகள் தோட்டதுக்கு சென்று
நிஜத்தைத் தேடும்போது
நிகழ்காலம் சொல்லும்
பூ மற்றும்
வண்ணத்துப்பூச்சியின்
இறந்தகாலத்தை..!”
- K. அற்புதராஜு.
No comments:
Post a Comment