எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 21 October 2014

ஒட்டுண்ணிகள்...


“மாநகரப்பேருந்தில்
நிறுத்தத்தில் இறங்க எழுந்த
லுங்கி கட்டிய தொழிலாளி
ஏனோ இறங்கவில்லை.
பேருந்தின் கதவுகள்
மூடிக்கொண்டன.

புறப்பட்ட பேருந்து
அருகாமை சிக்னலில்
நின்றபோது
அந்த தொழிலாளி
தான் இறங்க
பேருந்தின் கதவை
திறக்க சொல்லி
நடத்துனரை கேட்டார்.

‘இது என்ன
ஷேர் ஆட்டோவா?
நீ கேட்கும் இடத்தில
இறக்கி விட... நிறுத்தத்தில்
நிறுத்த மட்டுமே
என்னால் முடியும்.
ஓட்டுனரிடம் கேட்டுப்பார்..!’
என்றார் நடத்துனர்.

ஓட்டுனரிடம் சென்ற
தொழிலாளி
திட்டு வாங்கிக்கொண்டே
திறந்த கதவு வழியே
இறங்கினார்...

அவருடனே...
வேறு மூன்று பேரும்
சேர்ந்தே இறங்கினர்..!”

                             -   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment