எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 22 October 2014

என் மீது குயிலுக்கு என்ன கோபம்..?


மரங்கள் அடர்ந்த சாலையில்
அவசரமாக அலுவலகத்துக்கு
நடந்து செல்லும் பாதையில்
விசில் சத்தம் கேட்டு
முன்னே நடந்து செல்லும்
இரண்டு பெண்களும்
சந்தேகமாக திரும்பி என்னை
முறைத்துப்பார்க்கிறார்கள்...

பதறிப் போன நான்
வேறு யாராவது
செய்து இருப்பார்களோ
என சுற்றும் முற்றும்
பார்க்கும் போதுதான்
குயிலின் சத்தம்
கேட்டது...
அப்படியே 
விசில் சத்தம் போலவே...

என்னை சற்றே
ஆசுவாசப்படுத்தியது
அப்பெண்களின்
சிரிப்பு சத்தம்.

அது சரி...
என் மீது குயிலுக்கு 
அப்படி என்ன கோபம்..?
                              -  K. அற்புதராஜு.

No comments:

Post a Comment