எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 20 October 2014

படித்ததில் பிடித்தவை (கலாப்ரியா கவிதை)


“பள்ளி வாகனத்திற்குள்
பிள்ளைகளைத் திணித்தனுப்பி
சற்றே விட்டேற்றியாய்
வீடு புகும்
அம்மாவை
முணுமுணுத்துச் சுற்றி வருகிறது
குழந்தைகளிடமிருந்து
தொற்றிக்கொண்ட
ஒரு புதிய திரைப்படப் பாடல்..!”

                                                           -  கலாப்ரியா.
[விட்டேற்றிசுற்றத்தினின்றும் நட்பினின்றும் நீங்கிப்பிறரையும் அவ்வண்ணம் செய்விப்போன்; தொடர்பற்றவன்(ர்).]

No comments:

Post a Comment