உன் பெயர்
வைத்திருக்கின்றேன்...
“புத்தகங்களாலும் அழுக்குத்
துணிகளாலும்
நிரம்பி கிடக்கும்
என் மொட்டைமாடித் தனியறையில்
இப்போது இரண்டு மீன்கள்
கண்ணாடி தொட்டிக்குள்
உலவுகின்றன
நானில்லாத பொழுதுகளில் அவை
சத்தமாய் பேசி கொள்வதாய்
சொல்கிறார்கள்
இரண்டில் அழகானதிற்கு
உன் பெயர்
வைத்திருக்கின்றேன்
ஒரு முறை வந்து
பார்த்துவிட்டுபோயேன்.”
-
அய்யனார்.
(“நானிலும் நுழையும் வெளிச்சம்” கவிதை தொகுதியிலிருந்து).
No comments:
Post a Comment