தேடுங்கள்...
சுற்றுலா வந்த பிள்ளைகளின் சந்தோஷம்
தேவாலயத்தின் உள்ளே இரைச்சலானது
பிரார்த்தித்துக்கொண்டு இருந்தவர்கள் அதட்டினர்
விளையாடுகிறவர்கள் வெளியேறுங்கள்
ஜெபிப்பவர்கள் மட்டும் உள்ளே இருக்கலாம்
வேண்டுதல் முடித்து எழுந்த வாத்தியார்
சுவர் பார்த்து அதிர்ந்தார்
மாதாவின் கைகளில் மகன் இல்லை
குழந்தைகளுடன் வெளியேறியிருக்கக்கூடும்!
- ஜான்சுந்தர்
(விகடன் - 28.07.2010 )
சுற்றுலா வந்த பிள்ளைகளின் சந்தோஷம்
தேவாலயத்தின் உள்ளே இரைச்சலானது
பிரார்த்தித்துக்கொண்டு இருந்தவர்கள் அதட்டினர்
விளையாடுகிறவர்கள் வெளியேறுங்கள்
ஜெபிப்பவர்கள் மட்டும் உள்ளே இருக்கலாம்
வேண்டுதல் முடித்து எழுந்த வாத்தியார்
சுவர் பார்த்து அதிர்ந்தார்
மாதாவின் கைகளில் மகன் இல்லை
குழந்தைகளுடன் வெளியேறியிருக்கக்கூடும்!
- ஜான்சுந்தர்
(விகடன் - 28.07.2010 )
No comments:
Post a Comment