எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 18 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


வளையல்


“சின்னதாயிருக்கும் பொழுது
செய்த வளையல்.

அழித்துப் பண்ணவும் காசில்லை.

விரல்களை மடக்கி
கையைக் குலுக்கி
அழுந்திட
சோப்புப்போட்டு அழுத்தி
கஷ்டப்பட்டு
உள்ளே தள்ளியாயிற்று.

மினுக்கிக்கொள்ளும்
மணிக்கட்டுக்கு
ஒரு போதும் தெரிவதில்லை
விரல்கள் பட்ட வேதனை..!”


                                 -  வெ. இறையன்பு.

No comments:

Post a Comment