“எனக்குப் பிடித்ததை எல்லாம்
உன்னிடம் சொன்னேன்.
உனக்குப் பிடித்ததை எல்லாம்
என்னிடம் சொன்னாய்.
நானும் சொல்லவில்லை
நீயும் சொல்லவில்லை
நமக்குப் பிடிக்காததை.
மணமான முப்பதே நாட்களில்
பிடிக்காததைக்
கண்டுப்பிடிப்பதே
நம் வேலையாகிவிட்டது!
உனக்கும் எனக்குமான
பிணக்கை
வார்த்தைகளிட்டு
நிரப்ப முயன்றேன்
என் புத்தியால்.
கூடுதலாகிப் போனது
இடைவெளி.
சின்னதாய் ஒரு முத்தம்
சரி செய்திருக்கும்
சுலபமாய் என்று
என் குழந்தை மனசு
கேலி செய்தது
அப்போது..!”
- ரிஷபன்.
No comments:
Post a Comment