ரகசியம்
“உனக்கும்
“உனக்கும்
எனக்கும்
ஆயிரம் இருக்கும்.
அவற்றை
சொல்லிக்கொள்ளாதவரை
சுகங்களாய் நகரும்
பந்தம்.
உன்
உண்மை நடத்தையில்
உருகிப்போய்
என்றாவது
ஒரு நாள்
உடைந்து போகலாம்
என் ஆழங்கள்.
என் வேசமற்ற செய்கையில்
வெட்கிப் போய்
விருட்டென
எழுந்து நிற்கலாம்
நீ புதைத்தவைகள்.
அப்படி
ஒரு நிகழ்வு
இருவருக்கும்
நேரிடினும்
சொல்லாமல்
தவிர்த்துக்கொள்வோம்.
காக்கைக் கூட்டில்
குயில் முட்டையாய்
அடைகாக்கப்படும்
நம்
உறவில்
நீ புதைத்தவைகளையும்...
என் ஆழங்களையும்...”
- நெப்போலியன், சிங்கப்பூர்.
No comments:
Post a Comment