1. “அழைத்துப் போய் வந்த
ஆசிரியரின் அத்தனை
கெடுபிடிகளுக்குப் பின்னும்
இன்னமும் நினைவில்
அந்த ஸ்கூல் பயணம்
இன்பச் சுற்றுலா என்றே..!”
- செல்வராஜ் ஜெகதீசன்.
2. “யாருமற்ற பூங்காவில்
ஊஞ்சல்
ஆடிக் கொண்டிருக்கிறான்
என் மகன்.
எவரையோ சேருமென்று
கவிதைகள்
எழுதிக் கொண்டிருக்கிறேன்
நான்..!”
- செல்வராஜ் ஜெகதீசன்.
No comments:
Post a Comment