திணைமயக்கம்
அஃறிணை.
குருத்துவார ஓரமும்
கூட்டமாய் இரைத்தேடலாம்.
சிலுவைகள் மீதமர்ந்தும்
சிறகுகள் கோதலாம்.
தர்கா வாசலில்
தண்ணீர் பருகலாம்.
ஊர்வலமாய்
தெரு எதுவழியும்
திரும்பலாம்.
கோபுர உச்சியில்
கூட்டில் அடையலாம்.
தெரிந்தால் சொல்
திணை மாறும் வழி.
- நெல்லை ஜெயந்தா.
(ஆனந்த விகடனில் வெளி வந்த சொல்வனம் கவிதைப்
போட்டியில் ரூ.2000 பரிசுப் பெற்ற கவிதை)
திணை - நிலம்
அஃறிணை - பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றனவும்
No comments:
Post a Comment