*குழந்தையின் பூந்தோட்டம்*
“குழந்தை வரைந்தாள்
பூந்தோட்டம்.
அசலாய்
அப்படியே.
பட்டாம்பூச்சி
வந்து
ஏமார்ந்து
போகும்படி.
உற்று
கவனித்தால்
வாசனை
நாசி தட்டும்.
வண்ணம்
விதைத்து
வளர்ந்த
தோட்டம்.
அவளிடம்
மெல்லக் கேட்டேன்…
உன்
தோட்டத்திற்கு
இரவு
காவலிருக்கலாமா..?
கண்கள்
மலரச் சொன்னாள்…
உங்களை
வரைந்து வேண்டுமானல்
காவலுக்கு
வைக்கலாம்
அப்படியே
முடியாது..!”
*ராஜா சந்திரசேகர்*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*கவிஞர் ராஜா சந்திரசேகர்*
பிடித்த வாசகம்:
"என்னவும் செய்.
செய்வதில் நீ இரு."
ராஜா சந்திரசேகர் எழுதிய
கவிதைத்தொகுப்புகள்:
1. கைக்குள் பிரபஞ்சம்
2. என்னோடு நான்
(2003ஆம் ஆண்டுக்கான
கவிப்பேரரசு வைரமுத்துவின்
கவிஞர்கள் திருநாள் விருது
பெற்றது)
3. ஒற்றைக்கனவும்
அதைவிடாத நானும்
(2002ஆம் ஆண்டுக்கான
திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
பெற்றது)
4. அனுபவ சித்தனின்
குறிப்புகள்
5. நினைவுகளின் நகரம்
6. மீனுக்கு நீரெல்லாம்
பாதைகள்
7. மைக்ரோ பதிவுகள்
குழந்தைகள்
ReplyDeleteஎப்போதும் தெளிவானவர்கள்.
கவிதை மிக அருமை.
கவிதை அருமை.
ReplyDeleteபாராட்டுகள்.
கவிதை அருமை.
ReplyDeleteகுழந்தையின் நம்பிக்கை தெரிகிறது.
ReplyDeleteவாழ்த்துக்கள் கவியின் கற்பனைக்கு.
Superb
ReplyDeleteகவிதை மிகவும் அருமை.
ReplyDeleteஅருமை
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteஅருமையான
ReplyDeleteகவிதை...