எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 10 October 2021

*எலி*

 


இன்று நான்

ஒரு எலியைப் பொறி வைத்து

கொன்று விட்டேன்.

வீட்டின்  பின்புறம்

தென்னை மர வேர்களுக்கருகில்

ஒரு குழித் தோண்டி

அந்த எலியைப் புதைத்தும் விட்டேன்.

ஏனோ மனம் பரிதவிக்கிறது

பாவமென்று..!

 

வீட்டுத் தோட்டத்தில்

வாழைக்கன்று அருகில்

குழித்தோண்டி கிழங்கைத் தின்றும்,

எந்த செடி வைத்தாலும்

அதன் வேர்களை கடித்தும்,

காரின் மின் கம்பிகளை

சேதப்படுத்தியும்

அட்டகாசம் செய்யும்

அந்த பெருச்சாலியை

கொல்வதைத் தவிர

அதை கட்டுப்படுத்த

என்னதான் என்னால்

செய்ய முடியும்..?

 

இருந்தாலும்

ஏனோ மனம் பரிதவிக்கிறது

பாவமென்று..!

 

வானொலியில்

கொன்றால் பாவம்

தின்றால் போச்சு...

என கண்ணதாசனின்

பாவக் கணக்கைப்

பாடுகிறார் யேசுதாஸ்.

கொல்வதை எல்லாம்

தின்ன முடியுமா என்ன..?

 

மேஜையில் வீற்றிருக்கும்

கெளதம புத்தரை

மெளனமாக பார்த்தபடியே

அமர்ந்து இருக்கிறேன்

பாவ சுமையுடன் நான்..!

 

*கி.அற்புதராஜு*


15 comments:

  1. ஹரிகுமார்10 October 2021 at 09:07

    கவிதை அருமை.

    ReplyDelete
  2. சிவபிரகாஷ்10 October 2021 at 09:12

    'கொன்றால் பாவம்
    தின்றால் போச்சு...’
    என கண்ணதாசனின்
    பாவக் கணக்கைப்
    பாடுகிறார் யேசுதாஸ்.
    கொல்வதை எல்லாம்
    தின்ன முடியுமா என்ன..?

    --சிந்தனைக்குரிய கேள்வி--

    மேஜையில் வீற்றிருக்கும்
    கெளதம புத்தரை
    மெளனமாக பார்த்தபடியே
    அமர்ந்து இருக்கிறேன்
    பாவ சுமையுடன் நான்..!”

    -- அருமை --

    ReplyDelete
  3. சத்தியன்10 October 2021 at 09:14

    கவிதை அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  4. ஸ்ரீதர்10 October 2021 at 09:40

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  5. மோகன்தாஸ். S10 October 2021 at 09:41

    கவிதை அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  6. லதா இளங்கோ10 October 2021 at 14:39

    Express sadness.

    ReplyDelete
  7. ஸ்ரீகாந்தன்10 October 2021 at 14:40

    கவிதை அருமை.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. ஸ்ரீராம்11 October 2021 at 05:43

    அன்புள்ளம் கொண்ட
    கவிஞரின் தவிப்பு
    நியாயமானது தான்.
    இறைவனின் படைப்பில்
    எல்லா உயிர்களுக்கும்
    தனது இறையை
    தனக்குரிய வழியில்
    தேட உரிமை உண்டு
    என்பதனை கவிஞர்
    உணர்ந்ததால் ஏற்பட்ட
    குற்ற உணர்ச்சியை
    அழகாக கவிதையில்
    வெளிப்படுத்தியிருக்கிறார்.

    ReplyDelete
  10. நரசிம்மன் R.K11 October 2021 at 06:48

    அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அருமை.

    ReplyDelete
  12. ரவிசந்திரன்12 October 2021 at 13:05

    கவிதை அருமை.

    ReplyDelete