*பறவையும் குழந்தையும்*
“காலையில் கதவைத் திறந்தால்
பால்கனியில்
பறவையைக்
காணோம்.
மௌனசாட்சியாய்
தரையில்
இலவம்
பஞ்சு போல்
அதன்
ஒற்றை இறகு.
குனிந்து
கையிலெடுக்கப்போன
என்னைப்
பார்த்து
அலறியது
குழந்தை.
சிறகுக்கு
தானியமும்
தண்ணீரும்
வைக்கச்
சொன்னது
குழந்தை.
மறுநாள்
காலையில்
கதவைத்
திறந்தால்
சிறகு
எங்கோ
பறந்து
போயிருந்தது..!”
*இந்திரன்*
{*மிக அருகில் கடல்*
கவிதை அருமை.
ReplyDeleteபாராட்டுகள் கவிஞருக்கு.
மகிழ்ச்சி.
ReplyDeleteNice.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDelete