*கலையாதக் கோலம்*
“வரிசையாய்
அடுக்கப்பட்ட
செருப்புகள்.
கோலமாவில்
வரைந்த
கலையாதக்
கோலம்.
சாத்தப்பட்டிருந்த
வீட்டின்
கதவு...
முதல்தளத்தை
கடந்தவுடன்...
கலைந்த
செருப்புகள்.
சாக்பீஸ்சால்
வரைந்த
கோலம்.
சாத்தப்பட்ட
வீட்டின்
கதவு...
இரண்டாம்
தளத்தை
அடைந்தவுடன்
அதுவும்
அப்படியே.
விழிகள்
மட்டும்
பேசிகொண்டே
வந்தன…
கோலத்தோடும்,
செருப்போடும்,
பூட்டப்பட்டக்
கதவோடும்.
ஏதோ வெறுமை
அப்பிய
நிலையில்
மனம் பரிதவித்தே
நகர்ந்தது.
எனக்கான
குடியிருப்புப்
பகுதிக்குள்…
மனிதமொழியற்று
துக்கத்தைப்
பூசியிருந்தன
எதிரெதிர்
சுவர்கள்..!”
*செ.புனிதஜோதி*
கவிதை மிக அருமை.
ReplyDeleteஅபார்ட்மெண்ட் கலாசாரத்தையும்,
ReplyDeleteஅதில் வசிக்கும் மனிதர்களின்
விலகியிருக்கும் தன்மையையும்
தெளிவாகக் கூறும் கவிதை.
கவிதை அருமை.
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteநன்று.
ReplyDeleteகவிதை மிகவும் அருமை.
ReplyDelete