எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 15 September 2021

படித்ததில் பிடித்தவை (“தொலைத்து விடுகிறோம்” – ரிஸ்கா முக்தார் கவிதை)

 


*தொலைத்து விடுகிறோம்*

 

யார் ஒருவரிடம்

நம்மால் இயல்பாக

இருக்க முடிகிறதோ

யார் அருகாமையில்

நம்மால் பாதுகாப்பாக

உணரமுடிகிறதோ

யார் கரங்களுக்குள்

நம்மால் ஒரு

குழந்தையைப்போல

அடைக்கலமாக முடிகிறதோ

யார் முன்னால்

நம் முகமூடிகளின்

திரை விலகுகிறதோ

 

அந்த ஒருவரைத்தான்

அத்தனை அலட்சியமாய்

நாம்

தொலைத்து விடுகிறோம்

இல்லையா?

 

உண்மையில்

பிடித்தவற்றை இழந்து விடுவதும்

பின்

இழந்ததை நினைத்து

வருந்தி நிற்பதும்தான்

வாழ்க்கை என்பதா?

 

இருக்கும்போதே

எதனையும்

கொஞ்சம்

இறுகப்பற்றிக்கொள்ளக் கூடாதா

என்ன?

 

ஒவ்வொரு முறையும்

இந்த வாழ்வு

என்னை

வெறுங்கையோடு

திருப்பியனுப்புகையில்

அவ்வளவு

மனமுடைகிறேன்..!

 

*ரிஸ்கா முக்தார்*

5 comments:

  1. செல்லதுரை15 September 2021 at 08:21

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. சீனிவாசன்15 September 2021 at 08:22

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்15 September 2021 at 08:23

    நாமே நமக்கு சுற்றமும்,
    நாமே நமக்கு விதி வகையும்.

    -திருவாசகம்.

    ReplyDelete
  4. சத்தியன்15 September 2021 at 09:29

    கவிதை மிக அருமை.
    பாராட்டுகள் கவிஞருக்கு.

    ReplyDelete
  5. கெங்கையா15 September 2021 at 16:50

    கவிதை மிக அருமை.

    ReplyDelete