*பரிசு*
“பரிசுப் பொருள்
என்
கௌரவத்தை
உறுதி
செய்வது
பளபளப்புக்
காகிதத்தால்
மட்டுமல்ல.
அதன்
உள்ளீடு
ரகசியமாயிருப்பதால்.
உள்ளீடற்ற
ஒரு
உறவுப்
பரிமாற்றத்தை
அது
நாசூக்காக்குகிறது.
அதன்
உள்ளீடு
மீண்டும்
கை மாறலாம்.
மினுக்கும்
காகிதம் கை கொடுக்க
வீசவும்
படலாம்.
பரிசின்
எல்லாப்
பக்கங்களும்
எதிர்பார்ப்புகளால்
வலுவானவை.
கனமான
ஒரு
செய்தியைப்
பரிசுகள்
சேர்ப்பிக்கின்றன.
ரகசியமாய்க்
கைமாறும்
பரிசுகளில் மட்டுமே
சமூகம்
கைதவறி விட்டவை
உள்ளீடாய்..!”
*சத்யானந்தன்*
பரிசு குறித்த
ReplyDeleteகவிஞரின் பரிமாணம்
மிக சிறப்பு.
அருமை.
ReplyDeleteவார்த்தைகள் இல்லை
பாராட்ட..!
பரிசு கவிதை
ReplyDeleteமிக அருமை.
கவிஞருக்கு பாராட்டுக்கள்.