*ஊசி விற்பவன்*
“நேராக சில
வளைந்ததாக
சில
கூறாக
சில
தட்டையாக
சில என
இருபது
ஊசிகள்
ஐந்து
ரூபாய் என்றான்.
இப்படி
எத்தனையோ இருபதுகள்
அவன்
கைகளில்.
மழை
பெய்யும் குடை
சில்லறை
இழக்கும் பணப்பை
கை
தூக்க தெரியும் கக்கம்
என நம்
கிழிந்துபோன
அவமானங்களை
தைத்து மறைக்கும்
அவன்
ஊசி.
நெரிசலில்
சிக்கி
இருக்க
இடமல்லாது
கை
உதிர்த்து எவன் காலுக்கடியிலோ
சிக்கிக்
கொள்ளும் ஒரு ஊசி.
புகை
வண்டியின் அடுத்த நிறுத்தத்திற்கான
பல
கால்கள் நகர்ந்து செல்லும்
அவன்
கைகள் தடவிக் கொண்டிருக்கும்
மீதமுள்ள
கால்களை..!”
*காயத்ரி மகாதேவன்*
கவிதை மிக அருமை.
ReplyDeleteஅருமை சார்.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுகள்.
கவிதை மிக அருமை.
ReplyDelete