*இல்லாமல் போவேன்*
“ஒருநாள்
உனக்கு
நான் இல்லாமல் போவேன்.
அன்றைய
உன் காலைப்பொழுதின் முதல் முத்தத்தைத் தர
நான்
இருக்க மாட்டேன்.
உன்
மேற்சட்டையில் ஒரு பட்டன் இல்லாதிருப்பதை கவனிக்க
நான்
இருக்க மாட்டேன்.
உன்
உணவு வேளைகளை நினைவூட்ட
நான்
இருக்க மாட்டேன்.
நீ
என்ன அணிய வேண்டுமென
தேர்வு
செய்ய
நான்
இருக்க மாட்டேன்.
உன்
மாத்திரைகளை உனக்கெடுத்துக்கொடுக்க
நான்
இருக்க மாட்டேன்.
நீ
கைமறதியாய் விட்டுச்செல்லும்
அலைபேசியை
தேடித்தர
நான்
இருக்க மாட்டேன்.
இன்னும்
வாசல்
வரை வந்துனை வழியனுப்பவும்
வாசல்
திறந்துனை வரவேற்கவும்
நான்
இருக்க மாட்டேன்.
ஆம்
ஒருநாள்
உனக்கு
நான் இல்லாமல் போவேன்.
உண்மையில்
உனக்கு
நான் இல்லாத
ஒரு
நாளை
நீ
எங்ஙனம் கடப்பாயெனக் காண
அவ்வளவு
ஆவலாக உள்ளேன்.
ஒருவேளை
என்
இருப்பை உணராதது
போலவே
என்
இன்மையையும்
நீ
உணராமல்
போய்விடக்கூடும்.
எனினும்
உனக்கு
நான் எவ்வளவு இருந்தேன்
என்பதை
நினைவூட்ட
ஒருமுறை
நான் இல்லாமல்தான்
போகவேண்டுமென
நினைக்கையில்…
என்
இருப்பின் மீது
கவிழ்கிறது
இல்லாமையின்
பெரும் இருளொன்று..!”
*ரிஸ்கா முக்தார்*
கவிதை மிக அருமை.
ReplyDeleteபாராட்டுகள் கவிஞருக்கு.
கவிதை அருமை.
ReplyDeleteஎதுவும் கடந்து போகும்.
ReplyDeleteஇது இயற்கையின் நியதி.
கவிதை அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்.
ReplyDeleteகவிதை சிறப்பு.
ReplyDelete