எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 26 June 2022

படித்ததில் பிடித்தவை (“கைக்குட்டை” – மதார் கவிதை)


*கைக்குட்டை*

 

என் கைக்குட்டை பறந்தது காற்றில்

தலையிலிருந்து வானத்தில்

 

இதுவரை

நான் வாய் துடைத்தது

ஒரு சிறகின் முனையில்

 

சட்டைப்பைக்குள்

ஒளித்து வைத்திருந்தது

ஒரு பறவையை

 

கூண்டை உதறி

அது இப்போது

பறந்துவிட்டது

 

மழையில் நனைகிறது

என் கேசம்

 

கைக்குட்டைக் கம்பளத்தில்

ஏறிப் பறக்கிறது

வானின் ஒரு துளி

 

கைக்குட்டைக் கம்பளத்தில்

பறக்கிறது

வளி..!

 

 *மதார்*

(கல்குதிரை இதழ்)



1 comment:

  1. "கைக்குட்டை பறவையாக மாறி,
    ஒரு கம்பளமாக
    பரிணமித்துவிடுகிறது.
    வானின் ஒரு துளியை,
    வளியைச் சுமந்துகொள்கிறது.
    ஒரு குழந்தையாக என்னைக்
    கற்பனை செய்துகொண்டு
    இந்தக் கவிதையை வாசித்தால்
    மிகுந்த எழுச்சி தருகிறது.
    இன்னொரு அழகிய கவிதை."

    *பாலாஜி ராஜூ*

    "கல்குதிரை, மதார்
    கவிதைகள் பற்றிய
    வாசகர் கடிதம்."

    https://www.jeyamohan.in/166951/

    ReplyDelete