எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 10 June 2022

படித்ததில் பிடித்தவை (“ஊர்வலம் பார்ப்பது” – கல்யாண்ஜி கவிதை)

 


*ஊர்வலம் பார்ப்பது* 

 

கோஷம் எதுவும் போடாமல்

கோஷத்திற்கு எதிர்

கோஷம் தேடாமல்

நடைபாதையில் நின்று

ஊர்வலம் பார்ப்பது

சுவடற்றது

சரித்திரம் சொல்லும்

இயக்க விதிகளுக்கு

இணங்காதது

காலம் திணிக்கும்

பொறுப்புகளைப்

புறக்கணிப்பது

வீட்டு வேலி மூங்கிலில்

மத்தியானம் உட்கார்ந்திருக்கும்

மீன்கொத்தி போல

இடம் பொருள் ஏவல் அற்றது.

வாஸ்தவம்

எல்லாவற்றுடன்

இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

என் வரி உண்மையானது

பாசாங்கற்றது..!

 

*கல்யாண்ஜி*



No comments:

Post a Comment