எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 23 June 2022

படித்ததில் பிடித்தவை (“குழந்தையின் பந்து” – மதார் கவிதை)

 


*குழந்தையின் பந்து*

 

இனி எனக்கு

வேண்டாமென

பந்தைக் கீழே

குத்துகிறது

குழந்தை

 

துள்ளியெழும் அதன் செய்கை கண்டு

கத்துகிறது

 

துள்ளித் துள்ளி

உயரம் குறையும் பந்தின் அன்பில்

குழந்தைக்கு

அழுகையே வந்துவிடும் போல் தெரிகிறது

 

குழந்தை பந்தைத் தூக்கி முத்துகிறது

கொழகொழக்கும் எச்சிலோடு

 

பந்து கீழே விழுந்து துள்ளி ஓடுகிறது

குழந்தை சிரித்துக்கொண்டே

பின்னால் ஓடுகிறது

சமாதானப்படுத்த..!

 

 *மதார்*

(கல்குதிரை இதழ்)




2 comments:

  1. "மதாருடைய கவிதைகளில்
    குழந்தைகள் பரவலாக
    வருகிறார்கள்.
    குழந்தைகளுக்கு விளையாட்டுப்
    பொருட்கள் மேல் இருக்கும்
    உறவை நம்மால் புரிந்துகொள்ள
    முடியாது.
    ஒரு குழந்தையின் மனதுக்குள்
    புகுந்து அவர்கள் தீண்டும்
    பொருட்களைப் பார்த்தால்
    எண்ணற்ற படிமங்கள்
    கிடைத்துவிடும்.
    இந்தக் கவிதையில் குழந்தையும்
    பந்தும் ஒன்றுதான்.
    குழந்தைகளுக்கு மனதின் மேல்
    எந்தவிதக் கட்டுப்பாடுகளும்
    இல்லை, அவர்களுடைய மன
    ஓட்டங்களை இயக்கும் சக்தி
    அருவமானது."

    *பாலாஜி ராஜூ*

    "கல்குதிரை, மதார்
    கவிதைகள் பற்றிய
    வாசகர் கடிதம்."

    https://www.jeyamohan.in/166951/

    ReplyDelete
  2. ஸ்ரீராம்23 June 2022 at 17:24

    மிக அருமை.

    ReplyDelete