ஒரு நல்ல கவிதையை, கவிதை அனுபவத்தை வாசிக்கும் போது குலைத்துக்கொள்ள முடியுமா? முடியும். ஏனென்றால் நான் இதைச் செய்திருக்கிறேன், என்னுடைய இந்தச் செயலுக்கு மதாரின் கவிதைகளும் தப்பவில்லை. ஆனால் இந்தக் கவிதையை அப்படியே விட்டுவிடுகிறேன், இது கவிதை, அவ்வளவுதான். இந்தக் கவிதையில் ஒரு தூய்மையிருக்கிறது, நல்ல கவிதைக்கே உரிய தூய்மை. கடைசி மூன்று வரிகளை விட்டு மனம் நகர மறுக்கிறது, தோன்றியதை வரையறுத்துக் கூற முடியவில்லை, அது நல்ல கவிதையை வாசித்தவுடன் எழும் ஒரு உணர்வு என்று மட்டும் சொல்லமுடிகிறது. இது நல்ல கவிதை என்று வகைப்படுத்துவது ரசனை சார்ந்ததாக இருக்கலாம், ஆனால் அதீதமான எண்ணங்களை இந்தக் கவிதையின் மேல் செலுத்தாமல் இரு என்று மனதில் ஏதோ ஒன்று சொல்கிறதே, அதையே உள்ளுணர்வு என்று இப்போதைக்கு நம்பிக்கொள்கிறேன்.
ஒரு நல்ல கவிதையை,
ReplyDeleteகவிதை அனுபவத்தை
வாசிக்கும் போது
குலைத்துக்கொள்ள முடியுமா?
முடியும்.
ஏனென்றால் நான் இதைச்
செய்திருக்கிறேன், என்னுடைய
இந்தச் செயலுக்கு மதாரின்
கவிதைகளும் தப்பவில்லை.
ஆனால் இந்தக் கவிதையை
அப்படியே விட்டுவிடுகிறேன்,
இது கவிதை, அவ்வளவுதான்.
இந்தக் கவிதையில் ஒரு
தூய்மையிருக்கிறது, நல்ல
கவிதைக்கே உரிய தூய்மை.
கடைசி மூன்று வரிகளை விட்டு
மனம் நகர மறுக்கிறது,
தோன்றியதை வரையறுத்துக்
கூற முடியவில்லை, அது நல்ல
கவிதையை வாசித்தவுடன் எழும்
ஒரு உணர்வு என்று மட்டும்
சொல்லமுடிகிறது. இது நல்ல
கவிதை என்று வகைப்படுத்துவது
ரசனை சார்ந்ததாக இருக்கலாம்,
ஆனால் அதீதமான
எண்ணங்களை இந்தக்
கவிதையின் மேல் செலுத்தாமல்
இரு என்று மனதில் ஏதோ ஒன்று
சொல்கிறதே, அதையே
உள்ளுணர்வு என்று
இப்போதைக்கு
நம்பிக்கொள்கிறேன்.
*பாலாஜி ராஜூ*
https://www.jeyamohan.in/166951/