எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 15 June 2022

படித்ததில் பிடித்தவை (“குளிர் சுட்ட இரவு” – செ.புனிதஜோதி கவிதை)

 


*குளிர் சுட்ட இரவு*

 

தூங்கிக்கொண்டிருந்த

எங்களை

எழுப்பமுடியாமல் எழுப்பி

சொந்த ஊரை விட்டு

அழைத்துச் சென்ற

அம்மாவின் வலி...

 

வாடையை மென்று

வீசிக்கொண்டிருக்கும்

தென்றலுக்கு மட்டுமே

தெரிந்திருக்கக்கூடும்...

.

 

எத்தனையோ சொந்தபந்தங்கள்

இருந்தும்

கிளைகள் அற்ற

ஒற்றைமரமாய் நடந்து சென்ற

அப்பாவின் வலி

இருளுக்குள் மூழ்கிக்கிடந்த

காலத்திற்குத் தெரியும்...

 

அவமானங்களை

படிகளாக்கி

விடாமுயற்சியில்

நடை போடும்

வேளையில்…

 

கருணை கொண்ட

கடவுள் தற்போது

முகத்தைப் பார்த்து

புகழின் உச்சியில்

நிறுத்திவிட…

 

இல்லாத உறவுகள்

உறவு என்றே

எமை அழைத்து

சிறப்பு செய்தாலும்...

 

காயப்பட்ட மனம்

சிரித்துக்கொண்டே

இருளில் நடந்து வந்த

சுட்ட குளிரைத்தான்

போர்த்திக்கொள்கிறது..!

 

 *செ.புனிதஜோதி*





6 comments:

  1. நந்தகுமார்15 June 2022 at 09:18

    👌🏿

    ReplyDelete
  2. ஸ்ரீராம்15 June 2022 at 14:28

    மிக அருமை.
    அவமானங்கள்
    எப்பொழுதும்
    தழும்புகளால்
    நிலைத்து விடும்.
    எளிதில்
    மறக்க இயலாது.

    ReplyDelete
  3. செல்லதுரை15 June 2022 at 14:28

    👌👌

    ReplyDelete
  4. வெங்கட்ராமன், ஆம்பூர்15 June 2022 at 14:29

    👍👍💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  5. கெங்கையா15 June 2022 at 16:51

    மிக அருமை.

    ReplyDelete