“நெடுந்தூர ரயில் பயணம்.
சுட்டிக்
குழந்தையுடன்
இளம்
தம்பதிகள்.
அழுகை
சிரிப்பு
கோபம்
கேள்வி
என
அடிக்கடி மாறிக் கொண்டிருக்கிறது
குழந்தையின்
செயல்கள்.
தேற்றல்
பூரிப்பு
ஆறுதல்
பதில்
என
செயல்களுக்கு
ஏற்றப்படி
நிலைமையை
அந்த
சிறிய வயதிலும்
அழகாக
கையாள்கிறார்
குழந்தையின்
தாய்.
கைப்பேசிக்கு
தாவும்
குழந்தை.
தாய்
வழி, தந்தை வழி
தாத்தா, பாட்டியை
வீடியோவில்
அழைத்து
குழந்தையுடன்
பேச
வைக்கிறார்.
கதைச்
சொல்லியாகி
குழந்தைக்குப்
பிடித்த
நாய், பூனை, யானை
கதைகளால்
பிரமிக்கவும்,
பேய், பூதம், மோகினி
கதைகளால்
பயமூட்டவும்
செய்கிறார்.
எந்தவித
சலிப்புமில்லாமல்
இரண்டடி
இருக்கைக்குள்
எட்டு
மணி நேரப்பயணத்தை
சுட்டிக்
குழந்தையையும்
பயணிப்பவர்களையும்
இனிமையாக்கி
எல்லாருடைய
மனதிலும்
இடம்
பிடித்தும் கொள்கிறார்
அந்த
தாய்..!”
*கி.அற்புதராஜு*
Excellent. 💐💐💐
ReplyDelete👏👏💐💐🙏🏻🙏🏻
ReplyDelete👏👏🙏🙏👌🏻👌🏻
ReplyDeleteஇது போன்ற சில பெண்கள்
ReplyDeleteஎல்லோரையும்
ஆச்சர்யப்படுத்துவார்கள்.
அது சரி...
கணவர் என்ன
செய்துக் கொண்டிருந்தார்?
பயணத்தின்
Deleteபெரும் பொழுதில்
அவர் கைப்பேசியில்
படம் பார்த்துக்
கொண்டிருந்தார்...
இது தான்
ReplyDeleteதாய்மையின் சிறப்பு.
👌
ReplyDelete