*அவளின்
பறவைகள்*
“தன்னுடைய
மரத்தில்
பறவைகள் வந்தமருமாவென்று
ஆச்சர்யமாய் கேட்டாள் சிறுமி
அதிஸ்யா.
இதன் பூக்கள் எத்தனை
அழகென்று
தானே வியந்துகொண்டாள்.
பழங்களைப் பறித்து
எல்லோருக்கும்
பசியாற்றினாள்.
இதன் நிழலில் இளைப்பாறலாமென்று
தன் மழலைச் சொற்களால்
எல்லோருக்கும்
அறிவித்துக்கொண்டிருந்தாள்.
இறுதியில் தூக்கம் கண்களைச்
சுழற்ற
தான் வரைந்த மரத்தை
தலையணைக்கடியில்
பத்திரப்படுத்தினாள்.
ஒரு தோட்டத்தை ஏந்திக்கொண்டு
உலா வரத் தொடங்கிற்று இரவு..!”
*க.அம்சப்ரியா*
கவிதை அருமை.
ReplyDeleteகனவு மெய்ப்பட வேண்டும்.
ReplyDeleteRevealing a helpless
ReplyDeleteexpression.