எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 16 May 2021

படித்ததில் பிடித்தவை (“சாமி செளக்கியமா?” – யுகபாரதி கவிதை)

 


*சாமி செளக்கியமா?*

 

யாரோ ஒருவர்

வரக்கூடாது என்பதற்காக

வாசற் கதவுகளை

அடைத்துவைத்திருக்கிறேன்.

 

உயிரச்சத்தின் விளைவாக

முகக்கவசங்களை

வகைக்கொன்றாக வாங்கியும்

நிச்சயமற்ற வாழ்வை

சலித்தும் சபித்தும் வருகிறேன்.

 

ஆறிலும் நூறிலும்

என்றெல்லாம் கதையளந்தவனே

எனினும், எதிர்கொள்ளும்

திராணியற்று

எரியூட்டப்படும் சடலவாடையை

மிகச் சமீபமாக நுகர்கிறேன்.

 

நெருங்கியவர், நெருங்காதவர்

என எல்லாருக்காகவும்

பிரார்த்திக்கிறேன்.

 

உருவுகண்டு எள்ளாமைக்கு

உதாரணமான அந்த ஒருவர்

ஊரைவிட்டல்ல,

உலகைவிட்டே ஒவ்வொருவரையும்

துரத்துகிறார்.

 

கத்தியாலும் கப்டாவாலும்

என்னைநான் காப்பாற்றிக்கொள்ள

வழியில்லை.

 

இந்த சாமி என்ற ஒருவர்

இருப்பதாக

எழுதியும் பேசியும் வந்தீர்களே

அந்த ஆளிடம் கேட்கத் தோன்றுகிறது,

அய்யா நீங்களாச்சும்

செளக்கியமா..?

 

*யுகபாரதி*




5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *யுகபாரதி*
    தஞ்சாவூரைப் பூர்வீகமாகக்
    கொண்டவர்.
    கணையாழி, படித்துறை ஆகிய
    இதழ்களின் ஆசிரியக் குழுவில்
    ஆறு ஆண்டுகளுக்கு மேல்
    இலக்கியப் பங்களிப்புச்
    செய்தவர்.
    தொடர்ந்து இரண்டு முறை
    சிறந்த கவிதை நூலுக்-கான
    தமிழக அரசின் விருதைப்
    பெற்றவர்.

    இதுவரை பத்து கவிதைத்
    தொகுப்புகளும் பத்து கட்டுரைத்
    தொகுப்புகளும் தன்வரலாற்று
    நூல் ஒன்றும் எழுதியுள்ளார்.
    இந்நூல், இவருடைய
    பதினொன்றாவது கட்டுரைத்
    தொகுப்பு.
    வெகுசனத் தளத்திலும் தீவிர
    இலக்கியத் தளத்திலும் ஒருசேர
    இயங்கிவரும் இவருடைய திரை
    உரையாடல்கள் குறிப்பிட்டுச்
    சொல்லத்தக்க கவனத்தைப்
    பெற்று வருகின்றன.

    திரைமொழியையும் மக்கள்
    மொழியையும் நன்கு உணர்ந்த
    இவர், ஏறக்குறைய ஆயிரம்
    திரைப்பாடல்களுக்கு மேல்
    எழுதியிருக்கிறார்.

    *எழுதிய நூல்கள்*

    கவிதைத் தொகுப்புகள்:
    1. மனப்பத்தாயம்
    2. பஞ்சாரம்
    3. தெப்பக்கட்டை
    4. நொண்டிக்காவடி
    5. தெருவாசகம்
    6. அந்நியர்கள் உள்ளே வரலாம்

    கட்டுரைத் தொகுப்புகள்:
    1. கண்ணாடி முன்
    2. நேற்றைய காற்று
    3. ஒன்று
    4. நடுக்கடல் தனிக்கப்பல்
    5. வீட்டுக்கு வெளியே வெவ்வேறு
    சுவர்கள்
    6. அதாவது
    7. நானொருவன் மட்டிலும்
    8. நண்மை

    ReplyDelete
  2. ஸ்ரீராம்16 May 2021 at 09:08

    இன்றைய சூழலுக்கு
    பொருத்தமாக மனிதன்
    இறைவனிடம் வேதனையோடு
    கேட்கும் கேள்வி-
    கவிதை உள்ளத்தை
    கசக்கி பிழிகிறது.

    ReplyDelete
  3. Dr. Ramya Avinash16 May 2021 at 09:47

    Nice Mama...
    So apt for the time..!

    ReplyDelete
  4. கெங்கையா16 May 2021 at 11:26

    கவிதை மிக அருமை.
    அனுபவம் அப்படியே
    கவிதையாக...
    நன்றி... வணக்கம்..!

    ReplyDelete