எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 21 May 2021

படித்ததில் பிடித்தவை (“போராட்டம்” – இன்குலாப் கவிதை)

 


*போராட்டம்*

 

உதிர்ந்து வந்த

சிறகொன்றைக் கேட்டேன்

சாவுதான் விடுதலையா?

இல்லை...

போராட்டம் என்றது சிறகு..!

 

*இன்குலாப்*





6 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *இன்குலாப்*
    (பிறப்பு: 1944 -
    இறப்பு: திசம்பர் 1, 2016)
    என்பவர் தமிழ்க் கவிஞர்,
    பேராசிரியர், சொற்பொழிவாளர்,
    நாடக ஆசிரியர், சிறுகதை
    எழுத்தாளர், பத்திரிகையாளர்,
    பொதுவுடைமைச்
    சிந்தனையாளர் எனப் பன்முக
    ஆளுமையாளர் ஆவார்.
    சமூகச் சிக்கல்கள்,
    ஒடுக்குமுறைகள் போராட்டங்கள்
    ஆகியவற்றை மையப்படுத்தியே
    இவருடைய படைப்புகள்
    அமைந்திருந்தன.
    இன்குலாப் என்பதற்குப் புரட்சி
    என்று பொருள்படும்.

    இன்குலாப்பின் இயற்பெயர்
    செ. கா. சீ. சாகுல் அமீது.
    கீழக்கரை என்னும் ஊரில்
    பிறந்தார்.
    இசுலாமியச் சமூகத்தில் மிகவும்
    ஏழ்மை குடும்பத்தில் பிறந்தார்.
    இவருடைய தந்தை சித்த
    மருத்துவர்.
    பள்ளிப் படிப்பைக்
    கீழக்கரையில் முடித்துவிட்டு
    சிவகங்கை மன்னர்
    துரைசிங்கம் நினைவுக்
    கல்லூரியில் புகுமுக வகுப்பில்
    சேர்ந்து படித்தார்.
    அக்காலத்தில் மீரா என்னும்
    கவிஞர் அக்கல்லூரியில்
    பேராசிரியராகப் பணி புரிந்தார்.
    எனவே அவருடன்
    இன்குலாப்புக்கு நட்பு ஏற்பட்டது.

    மதுரைத் தியாகராசர்
    கல்லூரியில் இளங்கலை
    (தமிழ்) வகுப்பில் சேர்ந்துப்
    பயின்றார்.
    படிப்பை முடித்து
    சென்னையில் உள்ள
    புதுக் கல்லூரியில்
    ஆசிரியராகப் பணியில்
    சேர்ந்தார்.
    ஈரோடு தமிழன்பன்,
    நா. பாண்டுரங்கன்
    போன்றோருடன் இன்குலாப்
    புதுக்கல்லூரியில் பணி
    புரிந்தார்.

    2017ஆம் ஆண்டில் தமிழுக்கான
    சாகித்ய அகாதமி விருது இவர்
    எழுதிய *காந்தள் நாட்கள்*
    என்னும் நூலுக்கு அவரின்
    மறைவிற்குப் பின்னர்
    வழங்கப்பட்டது.
    ஆனால், அதனை அவர்
    குடும்பத்தினர் ஏற்க
    மறுத்துவிட்டனர்.

    ReplyDelete
  2. கவிதை அருமை.

    ReplyDelete
  3. சத்தியன்24 May 2021 at 07:18

    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்24 May 2021 at 07:41

    போராட்டங்கள் இல்லாமல்
    எந்த நிலையிலும்
    வாழ்க்கை வெல்வதில்லை.

    ReplyDelete
  5. கெங்கையா24 May 2021 at 08:57

    கவிதை அருமை.
    உண்மை.

    ReplyDelete
  6. கவிதை அருமை.

    ReplyDelete