*அம்மன்
வீதி உலா*
“வீதிப்பெண்களுக்கு
அம்மன் வீதி உலாவென்றால்
அலாதிப் ப்ரியம்.
மனசின் ஆசையெல்லாம்
குழைத்து மாக்கோலம் தீட்டுவார்கள்.
இன்று எந்த வாகனத்திலென்று
தவிப்போடு
தெருமுக்குவரை தேடுவார்கள்.
அருகே வந்ததும்
உருகித்தான் போவார்கள்.
சிங்க வாகனத்தில் அம்மன்கூட
மங்கலாய்த்தான் தெரிவாள்
பிரியமானவர்களின்
பவனி கடக்கும்வரை..!”
*காசாவயல் கண்ணன்*
Superb
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுகள்.
கவிதை அருமை.
ReplyDeleteஅம்மன் வீதி உலா
ReplyDeleteகடந்த கால நினைவுகள்.
காசாவயல் கண்ணன்
கவிதை அருமை.
கவிஞருக்கு
பாராட்டுக்கள் பல.
கவிதை மிக அருமை.
ReplyDeleteதிருவிழாக்களும்,
ReplyDeleteகொண்டாட்டங்களும்
நமது அன்பை
நெஞ்சைக் கவர்ந்தவர்களுக்கு
வெளிப்படுத்த
இனிய வாய்ப்பு..!
Giving excitement
ReplyDeleteand admiration.