எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 19 May 2021

படித்ததில் பிடித்தவை (“உலகம்” – சுகிர்தராணி கவிதை)

 


*உலகம்*

 

எங்கேயோ கேட்ட ஞாபகம்

உலகம் உருண்டை என்று.

மண்டியிட்டு

குனிந்து வளைந்து

எட்டி

நிமிர்ந்து நடந்து

எப்படிப் பார்த்தாலும்

சதுரமாய்த் தான் தெரிகிறது

என் வீட்டு ஜன்னலில்..!

 

*சுகிர்தராணி*




6 comments:


  1. #ஆசிரியர் குறிப்பு#

    *சுகிர்தராணி*

    தமிழ் கவிஞரும்
    எழுத்தாளருமான இவர்
    வேலூர் மாவட்டத்தைச்
    சேர்ந்தவர்.
    “கைப்பற்றி என் கனவுகேள்”,
    “இரவு மிருகம்”,
    “அவளை மொழிபெயர்த்தல்”,
    “தீண்டப்படாத முத்தம்” மற்றும்
    “காமத்திப்பூ” ஆகிய கவிதை
    நூல்களை இயற்றியுள்ளார்.
    தற்போது இராணிப்பேட்டை
    அரசுப் பெண்கள்
    மேல்நிலைப்பள்ளியில்
    தமிழாசிரியராக பணியாற்றி
    வருகின்றார்.

    தமிழாசிரியராக, கவிஞராக,
    பெண்ணுரிமை, சமூக சமத்துவ
    விடுதலை தளத்தில்
    களச்செயற்பாட்டாளராகவுள்ள
    இவருக்கு சுந்தர ராமசாமி
    விருது, புதுமைப் பித்தன்
    நினைவு விருது, பெண்ணியச்
    சாதனையாளர் விருது உள்ளிட்ட
    பல விருதுகள்
    வழங்கப்பட்டுள்ளன.

    இவரது கவிதைகள் அதன்
    மொழிக்காகவோ,
    அழகியலுககாகவோ அல்லாமல்,
    அதன் உள்ளோடும் பெண்
    விடுதலை, சமத்துவத்திற்காவே
    பெரிதும் அறியப்பட்டவை.

    "இடமற்று நிற்கும்
    கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க
    பேருந்துக்கு வெளியே
    பார்ப்பதாய்
    பாசாங்கு செய்யும் நீ
    என்னிடம்
    எதை எதிர்பார்க்கிறாய்
    காதலையா??"

    இந்தக் கவிதையில், மனமார்ந்த
    அக்கறையற்று உடல்சார்ந்தும்
    தன் தேவைகருதி மட்டுமே
    இருக்கும் பொதுப்புத்திக்
    காதலை சுட்டிக் காண்பிக்கிறார்.

    ReplyDelete
  2. சத்தியன்19 May 2021 at 09:39

    கவிதை அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  3. கவிதை அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்19 May 2021 at 15:07

    ஒரு சாமன்யனாக
    நான்கு சுவற்றுக்குள்
    இருந்து உலகை
    பார்த்தால் உண்மை
    விளங்காது என்பதை
    மிக சூட்சமமாக
    உரைக்கிறார் கவிஞர்.
    மிக அழகு.

    ReplyDelete
  5. கவிதை அருமை.

    ReplyDelete
  6. வணக்கம்.

    இந்தக் கவிதையை
    கவிஞர் அ.வெண்ணிலா
    சாகித்திய அகாதெமி-க்காக
    தொகுத்த “கனவும் விடியும்”
    என்ற (தமிழ்ப் பெண் கவிகளின்
    கவிதைகள்) கவிதை புத்தகத்தில்
    சமீபத்தில் படித்தேன்.

    கவிஞர் அ.வெண்ணிலா
    அவர்களின் முன்னுரையில்
    இக்கவிதை இடம் பெற்றிருந்தது.
    “தன் குறுகிய வாழ்வனுபவம்
    மீண்டும் மீண்டும் தன்னை
    வட்டத்திற்குள் சுழற்றிக்
    கொண்டிருப்பதைப் பேசுகிறார்
    ஒரு கவிஞர்” என
    இக்கவிதையைப் பற்றி
    எழுதியிருந்தார். ஆனால்
    கவிஞரின் பெயரைக்
    குறிப்பிடவில்லை.
    இணையத்தில் தேடியும்
    இக்கவிதையை எழுதிய
    பெண் கவிஞர் யாரென்று
    தெரியவில்லை.

    கவிஞர் அ.வெண்ணிலா
    அவர்களை மின்னஞ்சலில்
    தொடர்பு கொண்டு
    கவிஞர் பெயரைக்
    கேட்டப் போது இக்கவிதையை
    எழுதியவர் கவிஞர். சுகிர்தராணி
    என்று அறிந்தேன்.

    உடனே தகவல் அனுப்பிய
    கவிஞர் அ.வெண்ணிலா
    அவர்களுக்கு மிகுந்த
    நன்றியைத்
    தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete