எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 20 August 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


அம்மாவும் அப்பாவும் காணாமல் போக்கியவை...


“காணாமல் போனவை பற்றிய
நீண்டப் பட்டியலே அப்பாவிடமிருந்தது...
சின்ன வயதில் அட்லஸ் சைக்கிள்,
அக்காவை விட்டு வரப் போன போது
எடுத்துச் சென்ற பாரின் குடை,
கோவிலில் எப்போதோ செருப்பு,
வேலையிலிருந்து திரும்பும் போது
இருநூறு ரூபாய் பணம்,
என ஆரம்பித்து சென்று கொண்டேயிருந்தது.



அம்மாவும் சிலவற்றைத் தொலைத்திருந்தாள்...
வெளித் திண்ணையில் மறந்து வைத்த
ட்ரான்சிஸ்டர்,
ஒரு காதுத் தோடு
மற்றும்
பதினேழு வயது மகன்..!”

                                                            - ஜயோராம்சுந்தர்.

No comments:

Post a Comment