மாநகரச்செடி
“இரு புறமும் நதியோடும்
வண்டல் நகர் செடியது.
மெல்லிய இலையும்
நறுமணப் பூவும்
துளிர்க்கும் அழகும்
சௌந்தர்யம்.
வேரோடு பிடுங்கி
துர்நாற்ற நதியோடும்
பெரு நகரில் நட்டான்.
அழுக்கு நீரை குடித்தன வேர்கள்.
அமிலக்காற்றில் ஆடின இலைகள்.
குருத்துச் சிறுத்து கருகின துளிகள்.
எல்லாம் கொஞ்ச காலம்தான்.
இலையும் மணமும் குணமும் மாறி
தளுதளுத்து வளர்கிறது...
மேலும் ஒரு மாநகரச்செடி!”
- ரவிசுப்ரமணியன். (ஆனந்தவிகடன்)
No comments:
Post a Comment