கதை : சுஜாதா
இயக்கம் : பாலுமகேந்திரா
காணொளி காட்சி:
சுஜாதாவின் 'நிலம்' (அருண்
பிரசாத் – konnrai.blogspot.com)
சுஜாதாவின் 'நிலம்' சிறுகதையை பாலு மகேந்திரா கதை நேரத்திற்காக குறும்படமாக எடுத்துள்ளார். நிலம்
சிறுகதை சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் பாகம் 1-ல் உள்ளது (உயிர்மை பதிப்பகம்). நிலம் கதையின் களம் டெல்லி. ஏனோ பாலு
மகேந்திரா சென்னையில் நடப்பது போல் எடுத்துள்ளார். டெல்லியில் நடப்பது போல் உள்ள
சிறுகதையில் உள்ள flavor இக் குறும்படத்தில் இல்லை. இருப்பினும் சிறப்பாகவே வந்துள்ளது. இக்கதையில்
சுஜாதா கையாண்டுள்ள சொல்லாடால் அபாரமானது.
சுஜாதா, மத்திய அரசின்
பல்வேறு நிறுவங்களில் வேலை பார்த்தவர். லெளஹிக வாழ்விலும், காரியம் சாதிப்பதிலும் கெட்டிக்காரர்களான டெல்லி வாழ் தமிழர்களின் திறமையை
கூர்ந்து அவதானித்து எழுதியிருக்கிறார். இலக்கியம் கருத்து முத்துக்களை
உதிர்த்துக் கொண்டே இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதை இது.
** ** **
‘நிலம்’ கதை சுஜாதாவின் சமூகத்தைப் பற்றிய எள்ளல்
தொனியுடன் கூடிய விமர்சனம் தான். வசதி படைத்த மனிதர் ஒருவர் ஒரு ஆன்மீகக் கட்டிடம்
கட்டுவதற்கு உரிய நிலம் ஒன்றை மாநகராட்சி ஒதுக்கீடு மூலம் பெறுகிறார்.
ஒதுக்கப்பட்ட நிலம் மிகவும் வசதியாக இருப்பதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால்
அந்த மகிழ்ச்சி வெகு காலம் நீடிக்காமல் அவருக்கு பேரதிர்ச்சியாக ஒரு அறிவிப்பு
வருகிறது. அவருக்கு ஒதுக்கப்பட்ட நிலம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிய
வருகிறது. அதை எப்படியேனும் தடுக்க தன் நண்பர் ஒருவரை நாடுகிறார். நண்பர் அந்த
நிலம் கிடைக்க செய்யும் பிரம்மப் பிரயத்தனங்கள் தான் மீதிக் கதை.
** ** **
DISCLAIMER:
The video clips are posted for viewing pleasure and an information for the viewers. By this, I don't wish to violate any copyright owned by the respective owners of this video.
I don't own any copyright of this video. If this video is in violation of the copyright you own then, please let me know (E-Mail: arputharaju.k@gmail.com), I will remove it from my Blog.
No comments:
Post a Comment