எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 4 August 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


உண்மை விற்பவன்
“வியாதி, வயோதிகம்,
மகளுக்கு கல்யாணம்,
தொலைந்த உடைமைகள்...
என்று ஆயிரம் சொல்லி
பரிதாபம் விற்றுக்
காசு பார்க்காமல்...

நீண்ட அலுமினியக் குச்சி
கறுப்புக் கண்ணாடியுடன்
ஓடும் ரயிலிலும்
தடுமாறாமல்
பிளாஸ்டிக் கவர்,
பேனா ரீபில் விற்கும்
அந்த மனிதனைப்
பார்க்கும் போதெல்லாம்
ஏதேனும் வாங்குங்கள்
நீங்களும்..!”

                               -   இந்திய ராஜா.

No comments:

Post a Comment