திருவரங்கத்தில்
வாலி நடத்திய கையெழுத்துப்
பத்திரிகையில் பல இளைஞர்கள்
பங்கேற்றுக் கொண்டனர்.
அப்படிப்
பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில்
புகழ்பெற்ற எழுத்தாளரான
சுஜாதா.
தமிழ் மேல் தீராத
பற்று கொண்டிருந்த வாலிக்கு
ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது.
நன்றாகப் படம்
வரையும் திறமையும் இருந்தது. அந்தக்
காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து
கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற
எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித்
தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த
சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.
(மின் அஞ்சலில் அனுப்பிய திருமதி. A.S.K.கவிதகலா, B.E. அவர்களுக்கு
நன்றி)
No comments:
Post a Comment