எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 1 January 2014

மென்மை

                                                                                 
"மாமரத்து இலைகளை
சளைக்காமல்
பிய்த்துக்கொண்டிருந்த
குழந்தையை,
அருகில் அழைத்தான் அவன்.

‘நான் செய்வது போல
செய்கிறாயா?’ என்றான்.

தலையை ஆட்டி
‘சரி என்றது’
குழந்தை.

அவனது தலைமுடியை
கொத்தாக கைகளால்
பிடித்து இழுத்து
வலிப்பதாக நடித்தான்.

குழந்தையும்
அவன் செய்ததுப்போல
செய்து வலிப்பதாக
சொல்லியது.

‘இப்படித்தான் இலையை
பிடுங்கினால் மரத்துக்கும்
வலிக்கும்’ என்றான்.

இப்போதெல்லாம்
குழந்தை எந்த செடியிலும்,
மரத்திலும்
இலையைப்பறிப்பதில்லை..!"


- K. அற்புதராஜு

1 comment:

  1. உங்களைப்பற்றியும் உங்கள் இனிய மெல்லிய உணர்வுகளையும் சொல்லாமல் சொல்லிவிடுகின்றன உங்கள் கவிதைகள்.

    ReplyDelete