*பிறகு*
“நீ
என்னிடம்
பொய்
சொல்கிறாய் என்று
சந்தேகிக்க
தொடங்கிய
பிறகு
என்னிடம்
ஏராளமான
உண்மைகளை
சொல்லத்
தொடங்கினாய்..!”
*மனுஷ்யபுத்திரன்*
*பிறகு*
“நீ
என்னிடம்
பொய்
சொல்கிறாய் என்று
சந்தேகிக்க
தொடங்கிய
பிறகு
என்னிடம்
ஏராளமான
உண்மைகளை
சொல்லத்
தொடங்கினாய்..!”
*மனுஷ்யபுத்திரன்*
*குளிர்வி*
“பூமியைச்
சூடாக்க
30000 ரூபாய்க்கு
ஏசி வாங்கும்
நாம்,
பூமியைக் குளிர்விக்க
30 ரூபாய்க்கு
மரக்கன்று வாங்கி
நடுவதில்லை..!”
*வினோதினி*
*பூனை*
“முதல் அம்சம்
அதன் மெத்தென்ற ஸ்பரிசம்
குழைவு அடிவயிற்றின்
பீதியூட்டும் உயிர் கதகதப்பு.
இருவிழிகள் நட்சத்திரங்கள்
பார்க்கும் பார்வையில்
சிதறிஓடும் இருள் எலிகள்.
‘நான்..! நான்..!’ என
புலிபோல
நட்டுக்குத்தென வால் தூக்கி
நடக்கையில்
உருளும் கோட்டமுள்ள சக்கரமென
புழுப்போல
அதன் வயிறசைதல் காணலாம்.
கூர் நகங்களுடன்
ஒலியெழுப்பாத
சாமர்த்திய நடை இருந்தும்
‘மியாவ்’என்ற சுயப்பிரலாப குரலால்
தன் இரையை தானே ஓட்டிவிடும்
முட்டாள் ஜென்மம்.
நூல்கண்டோடும்
திரைச்சீலைகளின் அசையும்
நுனியோடும்
விளையாடும் புத்திதான்
எனினும்
பறவைகளை பாய்ந்து கவ்வும்
குரூரமும் உண்டு.
எலியை குதறுகையில்
பகிரங்கப்படும் அதன்
கொடும்பல்லையும்
நக்கி நக்கி பாலருந்துகையில்
தெரியவரும் இளகிய நாக்கையும்
ஒரே மண்டைக்குள்
வைத்துவிட்டார் கடவுள்.
ஞாபகப்படுத்திப்பாருங்கள்
உங்கள் குழந்தைப்பருவத்தில்
நீங்கள்
இப்பூனையைக் கண்டு
பயந்ததைப்போலவே
சினேகிக்கவும்
செய்திருக்கிறீர்களல்லவா..?”
*தேவதேவன்*
*துள்ளல்*
“நீரின் மேற்பரப்பில் ஒரு மீன்
துள்ளி விழுகையில் கண்டது
சுடும்பாறை
மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த அக்கணமே பறவை..!”
*தேவதேவன்*
*அணில்*
“பிளாஸ்டிக் குழாயைப் பற்றி
மேலேறிச்
செல்கிறது.
சுவர்களின்
மேல் ஓடுகிறது
சருகுகள்
சரசரக்க.
மொட்டை
மாடியில் உலாத்துகிறது.
தண்ணீர்த்
தொட்டி மூடிமேல் நின்று
கீழுலகைக்
காண்கிறது.
ஆளரவம்
கேட்டதும்
சட்டெனத்
தாவிவிடும்
அணிலுக்குத்
தெரியும்
தனக்குரியது
மரம்
தானென..!”
*பெருமாள் முருகன்*
*தண்ணீர்
லாரி*
“தெருக் குழாய்கள் இல்லாத
நகர் நோக்கி பசி போக்கத்
தாயாக ஓடிவரும்
நகராட்சித் தண்ணீர் லாரி.
பன்றிக் குட்டிகளாய்
மொய்த்து
முலை நோக்கி மோதுங் குடங்கள்
தமக்குள்ளே
இடித்துக்கொள்ளும்
ஆபாசமாய்க் கத்தும்.
கூச்சலிடும்.
எங்கே அந்த பரிசுத்த அமைதி
எனத் தேடினால்
ஒரு நிழலோரம் லாரி டிரைவர்
பீடி புகைத்துக்
கொணடிருப்பான்..!”
*தேவதேவன்*
*நானே...
நானாய்...*
“நேரே
கண்பார்க்க தயங்கி
தரை பார்ப்பினும் கண்கூசும்
உன் வீட்டு பளிங்கு தரை.
சற்றே கோணம் திரும்ப
சுவரின் உயர்தர டிஸ்டம்பர்
கண்ணில் உறுத்தும்.
பலபக்கம் வியூகம்
வைத்து எனை மூலையில்
தள்ளிடும் உன் வீடு.
என் கம்பீரம் குன்றி…
சிற்றெறும்பாய் சிறுத்து.
எனை நானாய்
என் வீட்டிலேயே இருக்கவிடு..!”
*சே.பிருந்தா*
*செக்கிங் பணிக்குப் பெண்கள் தேவை*
“பஞ்சுக்குப்பை
மண்டிய தலை
அரிக்கிறது.
பனியன்
கம்பெனி உஷ்ணத்தில்
சன்னமாய்ச்
சுரக்கும் வியர்வையில்
ரவிக்கைக்
கையிடுக்கு ஊறி
உறுத்துகிறது.
சமயத்தில்
கொண்டுவந்த
பழஞ்சோறு
ஊசிப்போய்
ஏமாற்றுகிறது.
விடிய
விடிய பணியிருக்கிறது.
கண்ணுக்குள்
மண்ணறுக்கிறது.
துணி உதறி
உதறி
கைகளிரண்டும்
கதறுகிறது.
அவ்வப்போது
பூவாத்தா
மடித்துத்தரும் வெற்றிலையில்
அன்பு
தடவியிருக்கிறது.
தங்கமணியக்கா
தன்
குடும்பக் கதை சொன்னால்
எனக்கும்
அழுகை வருகிறது.
மேற்பார்வையிடும்
மெர்ச்சண்டைசரின்
பார்வையில்
இன்பத்திற்கான
யாசிப்பு
எப்பொழுதும்
தென்படுகிறது.
இடையிடையே
நினைவும் வருகிறது
குடிகாரப்
புருஷ முகம்
ஸ்கூல்
போகும் சுப்பரமணி முகம்..!”
*மகுடேசுவரன்*
*டீ*
“அவர் ஸ்ட்ராங்கா போடச் சொன்னார்.
இன்னொருவர் டபுள்ஸ்ட்ராங்
என்றார்.
ஒருவர் லைட் என்றார்.
மற்றவர் சர்க்கரை
வேண்டாமென்றார்.
கடைசியாய் வந்தவர் டிக்காசன்
மட்டும் என்றார்.
குழம்பிய மனிதர்களுக்காக
குழம்ப வேண்டியிருக்கிறது டீ..!”
* கபிலன்*