“எதிர்க்காற்றில் மிதித்தபடி
அவசரமாய் போய்க்கொண்டிருந்த
அலுவலகப் பயணமொன்றில்...
‘அதுவரைக்கும்னா’ என்று
தாவி என் சைக்கிளின்
பின் சீட்டில் அமர்ந்த
பள்ளிச் சிறுவன்
பேச்சுவாக்கில்...
ஏழாவது படிக்கும் நான்
பத்தாவதுக்குப்பின்
எப்படியும் போய்விடுவேன்
ஏதாவது ஒரு வேலைக்கு
என்றான்.
‘மேல படிக்கலாமில்ல...’
என்றேன்.
அது போதும்னா
அப்பா அம்மாவுக்கு
கஞ்சி ஊத்த என்றான்.”
- செல்வராஜ் ஜெகதீசன்.
No comments:
Post a Comment