“அதிகாலை வேளை...
பூங்காவில் யோகாசனம்.
கண்களை மூடி பிரணாயாமம்
செய்யும் போது
பறவைகளின் சத்தங்களை
கேட்க மட்டும் மனதை
ஒரு நிலைப் படுத்தினாலும்…
நேற்று அலுவலகத்தில் நடந்த
சுவாரசியமான நிகழ்வை கடந்து,
சிறுவயதில் கல்லனைக்கு போன
பள்ளி சுற்றுலாவை நினைத்து,
சென்ற வாரம் ரயிலில்
பொருள்கள் விற்ற கண் பார்வை
இழந்தவரை ஏமாற்றிய
வாலிபன் மீது கோபம் கொண்டு,
பார்க்காத சினிமாவை
பார்த்ததாகச் சொல்லி
சிறு வயதில் நண்பர்களுக்கு
கதை சொல்லி ஏமாற்றியதை
நினைத்து சிரித்து,
நீண்ட தலைமுடியுடன்
தினமும் ரயிலில்
பிரயாணிக்கும் அந்தப்
பெண் தலைமுடியை
எப்படி பராமரிப்பார்?
என நினைத்து,
.
.
.
மனம் ஒரு புள்ளியில்
நிலைக்கொள்ளாமல் குரங்காக
தாவிக்கொண்டேயிருக்கிறது..."
No comments:
Post a Comment