“குல்பி ஐஸ் காரனைக் கண்டு
கையாட்டிச் சிரிக்கிறது.
வேலைக்காரியுடன்
ஒளிந்து விளையாடுகிறது.
பக்கத்து வீட்டு மாமா தோளில்
இரு கை போட்டேறி
உரிமையோடு
கண்ணாடியை இழுக்கிறது.
வீதியில் செல்வோரெல்லாம்
அந்நியோன்யமாய்.
வருட விடுமுறையில் வரும்
பாவப்பட்ட
அப்பா மட்டும்
அந்நியமாய்..!”
- எம். சுதா முத்துலட்சுமி.
No comments:
Post a Comment