எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 13 September 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


கல்யாண ரிசப்ஷன்...
“யார் யாரோ யார் யாரோ
வருவார்கள்... போவார்கள்...
வாயால் புன்னகைப்பார்கள்.

பரிசென்று பாக்கெட்டுகள் குவியும்.
பெரும்பாலும் இஸ்திரிப் பெட்டி.

மாலையில் ஜிகினா கழுத்தறுக்க
மேளச் சத்தம்...
மண்டைக்குள் இடிக்கும்.
உடம்பெல்லாம் எரியும்.

உள்ளங்கை ஈரமாகும்.
கால்கள் பூட்சுக்குள்
காற்றுக்காய்த் தவிக்கும்.
கடிகாரம் நகராது.

அத்தனைக் கண்களின்
அவஸ்தை தரும் பார்வை வேறு...

இத்தனைக்கும் நடுவில்
மகத்தான ஆறுதலாய்
என்னருகில், மிக அருகில்
உன்
வெள்ளை விரல் நுனியில்
மருதாணி..!”
                                                   -    ம. பூரணி.


[இந்த கவிதையை ஒரு குறும்படமாகக் கூட எடுக்கலாம் – எழுத்தாளர். சுஜாதா]

No comments:

Post a Comment