தொலைஞ்சி போச்சு
“துபாயிலிருந்து
அனுப்பிய பணத்தில்
கொட்டகையைப் பிரிச்சி
மச்சு வீடு கட்டியாச்சு.
மலை அடிவாரத்தில்
நஞ்சை ஆறு ஏக்கர்
வாங்கிப் போட்டாச்சு.
வெளிநாட்டுப் பொருளா
வீடு நிறைஞ்சி போச்சு.
எல்லாம் முடிஞ்சு
நரைத்த தலையும்,
தங்கப்பல்லுமா
புருஷன் வந்த போது
இளமையும் தொலைஞ்சு போச்சு..!”
- எஸ். கதிரேசன்.
No comments:
Post a Comment