எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 11 September 2014

படித்ததில் பிடித்தவை (பாரதியார் கவிதை)

இன்று பாரதியார் நினைவு நாள்...


வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா...
“தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன் – வெண்ணிலாவிலே
பாங்கியோடு என்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் – அடி கண்ணம்மா..!
மார்பு துடிக்குதடி..!
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே
பாவை தெரியுதடி..!

மேனி கொதிக்குதடி – தலை சுற்றியே
வேதனை செய்குதடி..!
வானில் இடத்தையெல்லாம் – இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்.
மௌனத்து இருக்குதடி – இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே..!
நானொருவன் மட்டிலும் – பிரிவென்பதோர்
நரகத்து உழலுவதோ..!”


                                                                      - மகாகவி. பாரதியார்.

[பாங்கி - தோழி]


இந்த கவிதையை "வறுமையின் நிறம் சிவப்பு" படத்தில் இயக்குனர். கே. பாலசந்தர் அவர்கள் பாடல் காட்சியாக அழகாக படமாக்கியிருப்பார். 

இசை அமைப்பாளர்  எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் அருமையான மெட்டு அமைத்திருப்பார்.

ஒளிப்பதிவு: பி.எஸ். லோகநாத்.
பாடகர்: எஸ்.பி. பாலசுப்ரமணியன்.
நடிப்பு: கமல்ஹாசன் & ஸ்ரீ தேவி.


அந்த பாடலின் காணொளி காட்சி:




நிபந்தனைகள்:


1. இந்த காணொளி காட்சி https://www.youtube.com/watch?v=uSohjJSwIYk
    இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது.

2. இந்த காணொளி காட்சி எந்த வணிக நோக்கத்துடனும்
    வெளியிடப்படவில்லை.

3. இந்த காணொளி காட்சிக்கு தடைக்கூற விரும்பினால்  arputharaju.k@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்.

** ** **

No comments:

Post a Comment