எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 25 November 2013

விடுமுறை

                                                                                                     
"வார விடுமுறை
 என்றால் கூட
 பரவாயில்லை.

 இரண்டு, மூன்று
 நாட்கள் விடுமுறை
 வரும்போது
 வருத்தமாகத்தான்
 உள்ளது...

 ஆபீஸ் வெண்டிலேட்டரில்
 மதிய உணவுக்காக
 அணில் காத்திருக்குமென்று..!"


                -- K. அற்புதராஜு

2 comments:

  1. உங்கள் கவிதைகளில் உள்ள மென்மையை நன்றாக உணர முடிகின்றது. எந்தக் கவிதைகளிலும் ஆத்திரம் கோபம் எதுவுமில்லை. சலிப்பும் லேசான அங்கலாய்ப்பும் தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணக்கிடைக்கின்றன. எல்லாமே மெல்லியல்தான். இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள் கவிஞரே? அன்புடன் பரந்தாமன்.

    ReplyDelete