எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 15 November 2013

அங்கீகாரம்

                                                                                       
காவிரி டெல்டா 
பேருந்து பயணம் 
ஒரு புறம் காவிரி 
மறுபுறம் கொள்ளிடம் 
இடையில்... 

கரும்பு, 
நெல், 
உளுந்து, 
பச்சை பயிர், 
முள்ளங்கி, 
எள், 
பருத்தி, 
வேர் கடலை... 
என பயிர்கள் 
விளை நிலங்களில்! 

நடுவில் 
உறுத்தலாக 
விளம்பர பலகையில் …
"அண்ணாமலையார் நகர் 
அரசு அங்கீகாரம் பெற்ற 
வீட்டு மனைகள்- விற்பனைக்கு
!"

                                    -- K. அற்புதராஜு  

No comments:

Post a Comment