எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 21 November 2013

*ஒற்றை பூமாலை*


மனைவியின்

வேண்டுதலை

நிறைவேற்ற 

ஞாயிறு மாலை 

கோவிலுக்கு 

பேருந்தில் செல்லும் முன் 

கோவில் அருகில் 

பூமாலை கிடைக்குமோ

கிடைக்காதோ என எண்ணி 

ஏறுகின்ற பேருந்து நிலையம் 

அருகிலிருந்த பூக்கடையில் 

ஒற்றை பூமாலையை 

விலைப் பேசி வாங்கி 

பேருந்தில் ஏறினோம். 


ஒற்றை பூமாலையைப் 

பார்த்த சகப் பிரயாணி 

சற்றே தள்ளி உட்கார்ந்தார். 



இறங்கும் பேருந்து நிலையம் 

அருகிலேயே கோவில் 

இருந்ததால், நாங்கள் 

கோவிலுக்குள் நுழைவதை 

அவர் பார்த்திருந்தால் 

திருப்தி அடைந்திருப்பாரோ 

என்னவோ..!

 

 *கி.அற்புதராஜு*

6 comments:

  1. இயல்புநிலை

    ReplyDelete
  2. தான் நினைத்தது வேறு, நடந்தது வேறு என ஏமாற்றம் அடைந்திருப்பார். மெய்ப்பொருள் காண்பது அறிவு.

    ReplyDelete
  3. நந்தகுமார்7 March 2021 at 08:08

    நம்மில் பலரும்
    எதிர்மறையான
    எண்ணங்களை
    மட்டுமே
    உடையவர்களாக
    உள்ளனர்.

    ReplyDelete
  4. கெங்கையா7 March 2021 at 08:09

    கவிதை அருமை
    பயணி பாவம்..!

    ReplyDelete
  5. ஸ்ரீராம்7 March 2021 at 18:47

    மிக அருமை.

    ReplyDelete