காவிரி டெல்டா 
பேருந்து பயணம் 
ஒரு புறம் காவிரி 
மறுபுறம் கொள்ளிடம் 
இடையில்... 
கரும்பு, 
நெல், 
உளுந்து, 
பச்சை பயிர், 
முள்ளங்கி, 
எள், 
பருத்தி, 
வேர் கடலை... 
என பயிர்கள் 
விளை நிலங்களில்..! 
நடுவில் 
உறுத்தலாக 
விளம்பர பலகையில்…
“அண்ணாமலையார் நகர் 
அரசு அங்கீகாரம் பெற்ற 
வீட்டு மனைகள்- விற்பனைக்கு..!”
*கி.அற்புதராஜு*

 
அருமை.
ReplyDeleteஒருபுறம் விவசாயத்தை மேம்படுத்துவதாக ஆட்சியாளர்கள் பெருமை படுவதும், மறுபுறம் அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகளும், ரியல் எஸ்டேட் புரோக்கர்களும் இணைந்து ஏழை விவசாயிகளை ஏமாற்றி நிலங்களை விற்று பெரும் பணக்காரர்கள் ஆவதும் தான் தமிழகத்தின் இன்றைய நிலை. பணத்தை தின்ன முடியாது என இவர்கள் அறிவது எப்போது?
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteYes true.
ReplyDelete