*2013 சிறுமி*
“என்னுடைய கைபேசியில்
சிறு பழுது.
நீக்கக் கொடுத்துவிட்டுக்
காத்திருந்தேன்.
ஒரு தகப்பன்
தன் எட்டுவயதுப்
பெண் குழந்தைக்குக்
கைக் கடிகாரம்
வாங்கிக் கொடுக்க வந்தான்.
189/- ரூபாய் விலைக்கு
அழகழகான சீனத் தயாரிப்புகள்.
தகப்பன் தன் மகளின்
தேர்வுக்கே விடுகிறான்.
ஏழு எட்டை நிராகரித்து,
இரண்டு கடிகாரங்களில்
ஒன்றைத் தேர்ந்து எடுத்து
அப்பாவிடம்,
‘இது நல்லா இருக்கா ப்பா?’
என்று ஒப்புதல் கேட்கிறது.
காரில் வந்திருப்பார்கள் போல.
இவள் கடிகாரத்தைப் பார்த்ததும்
தனக்கும் வேண்டும் என
அவளுடைய தம்பியும் கேட்க.
தகப்பன், அக்கா, தம்பி
வருகிறார்கள்.
அக்காவுடையது போலவே
வேண்டும் என்கிறான் தம்பி.
அழவில்லை.
பிடிவாதம் பிடிக்கவில்லை.
ஆனால் உறுதியாக.
தகப்பன் விலகி நிற்க,
அக்கா தன் தம்பியிடம்,
உரையாடத் துவங்குகிறாள்.
அக்கா கையை விட
அவனுடைய கை குட்டியாம்.
அதனால் குட்டிக் கடிகாரம்தான்
நன்றாக இருக்குமாம்.
கடைக்காரருக்கு ஏற்கனவே
மலர்ச்சியான முகம்.
அவர் மேலும்
சில சிறிய கடிகாரங்களை
கண்ணாடித் தடுப்பில்
வைக்கிறார்.
‘இது நன்றாக இருக்கும் உனக்கு’
என்று அவன் மணிக்கட்டில்
வைத்துப் பார்க்கிறாள்.
‘நல்லா இருக்கா?’ என்று
தம்பியிடம் கேட்கிறாள்.
அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது
தலையை ஒப்புதலாக
அசைக்கையில்.
தகப்பன் விலை கேட்கவில்லை.
அக்கா கேட்கிறாள்.
‘நைண்ட்டி’ என்கிறார்
விற்பனையாளர்.
மணிக்கட்டில் கடிகாரத்தையே
பார்த்துக் கொண்டு இருந்தவன்,
‘நைண்ட்டின்னா தொண்ணூறு
தானே ப்பா’ என்கிறான்.
நான் அவனுடைய உச்சிச்
சிகையைக் கலைத்து விடுகிறேன்.
இவ்வளவு பேசி, தீர்மானித்து,
தேர்ந்தெடுத்து அந்தச் சிறுமி
இதுவரை செய்தது எல்லாம்
பெரிதில்லை.
அப்பா கொடுத்த ரூபாயை
வாங்கிக் கடைக்காரரிடம்
கொடுக்கிறது.
வாங்குகிறவர் கைவிரல்களில்
ஒரு விரல் நகத்தில் ரத்தம் கட்டி
நீலமாக இருக்கிறது.
‘கையில் அடிபட்டுவிட்டதா
அங்க்கிள்’ என்று கேட்கிறது.
‘சரியாப் போச்சு அதெல்லாம்’ -
விசாரிப்புக்கு பதில் சொல்லும்
அவர் முகம் கனிந்து நெகிழ்கிறது.
எல்லாம் சரியாகத்தானே போகும்,
இப்படி அக்கறையாகக் கேட்க ஒரு
எட்டு வயதுச் சிறுமி இன்னும்
நம்மோடு இருக்கும் போது..!”
*கல்யாண்ஜி*
#######################
(இந்த 2013 சிறுமியை எல்லாம்
எங்கள் STC ROAD இல் வளர்ந்த
பெண்ணாக மீண்டும் பார்க்க
ஏன் காலம் அனுமதிப்பதே
இல்லை?)
#######################
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDeleteவண்ணதாசன்
(பிறப்பு: 1946)
என்ற புனைப்பெயரில்
சிறுகதைகளும்,
கல்யாண்ஜி என்ற
புனைப்பெயரில்
கவிதைகளும்
எழுதுபவரின்
இயற்பெயர்,
சி.கல்யாணசுந்தரம்.
இவர் தமிழ்நாடு,
திருநெல்வேலியில்
பிறந்தவர்.
இவரது தந்தை
இலக்கியவாதி
தி. க. சிவசங்கரன் ஆவார்.
இவர் தந்தையும்
சாகித்ய அகாதமி விருது
பெற்றவர்.
நவீன தமிழ்ச் சிறுகதை
உலகில் மிகுந்த கவனம்
பெற்ற எழுத்தாளரான
வண்ணதாசன்,
தீபம் இதழில் எழுதத்
துவங்கியவர்.
1962 ஆம் ஆண்டில் இருந்து
இன்று வரை தொடர்ந்து
சிறுகதைகள் எழுதி வருகிறார்.
இவரது 'ஒரு சிறு இசை'
என்ற சிறுகதை நூலுக்காக
இந்திய அரசின் 2016 ஆம்
ஆண்டுக்கான
சாகித்திய அகாதமி விருது
கிடைத்தது.
இவரது சிறுகதைகள்
பல்கலைக்கழகங்களில்
பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
"இலக்கியச் சிந்தனை"
உள்ளிட்ட பல முக்கிய
விருதுகளைப் பெற்றிருக்கிறார்
வண்ணதாசன்.
2016 "விஷ்ணுபுரம் விருது"
இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
இலக்கியத் தோட்டம் எனும்
அமைப்பு தமிழ்
இலக்கியத்திற்கான வாழ்நாள்
சாதனையாளர் விருதினை
இவருக்கு வழங்கியது.
👌🙏🙏
Deleteமனித மனங்களின் அழகியல்
Delete🖤❤️💙
ReplyDelete👍
ReplyDelete🙏
ReplyDelete👍
ReplyDelete🙂
ReplyDeleteVery Excellent.
ReplyDelete💐💐🌹💐💐
👌💞😊🙏
ReplyDeleteNice to read.
ReplyDelete🌷
🙏
ReplyDeleteNice.
ReplyDelete👌🏻
👌
ReplyDelete🙏
ReplyDeleteமிக அருமை.
ReplyDelete👍👍💐💐🙏🏻🙏🏻
ReplyDelete🙏
ReplyDelete👌👍💐
ReplyDelete👏
ReplyDelete👍
ReplyDelete👌
ReplyDeleteஅருமை
ReplyDelete👍
ReplyDelete👌👌👌🙏🙏🙏🙏
ReplyDeleteஎதார்த்தமாக இருந்தாலும் சிறுமியின் செயல் மிகவும் சிறப்பு.
ReplyDelete👌
ReplyDeleteGood one, sir.
ReplyDeleteCompassion user
happiness, to all the
parties concerned.
Super sir 👌
ReplyDelete👍
ReplyDelete👏
ReplyDeleteஅன்புள்ள ஐயா,
ReplyDeleteகதை எளிமையான அதேசமயம் மனதைக் கவரும் விதத்தில் அழகாகச் சொல்லப்பட்டது. சகோதரிக்கும் சகோதரனுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பை இது எவ்வாறு சித்தரிக்கிறது என்பதுடன், அவர்களின் உறவைக் கண்ட தந்தையின் மகிழ்ச்சியும் சிறந்த பகுதியாகும்.
கடை உரிமையாளரிடம் சிறுமியின் கருணை என் இதயத்தைத் தொட்டதால், முடிவு உண்மையிலேயே மனதைக் கவரும் வகையில் இருந்தது. அன்புடனும் அக்கறையுடனும் வளர்க்கப்படும் குழந்தை எப்படி இரக்கமுள்ள தனிமனிதனாக வளர்கிறது என்பதை அழகாகப் பிரதிபலிக்கிறது. குழந்தைகளை பாசத்துடனும் மதிப்புகளுடனும் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்த கதை அற்புதமான நினைவூட்டுகிறது, அவர்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் அன்பின் ஆதாரமாக மாற்றுகிறது.
அத்தகைய அர்த்தமுள்ள கதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி 💐🙏
காலை வணக்கம்
Deleteதிரு. ராஜாராமன் ஐயா.
*2013 சிறுமி* கவிதை (கதை)
-க்கான தங்களின் பகுப்பாய்வு
மனதைத் தொட்டது.
மிகவும் நன்றி.
புதுக்கவிதையின்
வளர்ச்சியில் ...
கவிதைக்கான எதுகை
மோனை தவிர்க்கப்பட்டு,
காணும் காட்சியினை
அலங்கார வார்த்தைகளின்றி,
உள்ளதை உள்ளபடியே எளிய
தமிழ்ச் சொற்கள் கொண்டே
எழுதப்படும் சிறு சம்பவங்கள்
இப்போது கவிதைக்கான
கட்டுக்குள் வந்து விடுகிறது.
அதைதான் கவிஞர்
இக்கவிதையில்
கையாண்டுள்ளார்.
இக்கவிதையில் தந்தையின்
மகிழ்ச்சியை விட கவிஞரின்
மகிழ்ச்சி பெரிதாக
தெரிகிறது.
*"அன்புடனும்
அக்கறையுடனும்
வளர்க்கப்படும் குழந்தை
எப்படி இரக்கமுள்ள
தனிமனிதனாக வளர்கிறது
என்பதை அழகாகப்
பிரதிபலிக்கிறது."*
- என தாங்கள் கவிதையை
உள்வாங்கி தெளிவாக ரசித்து
தெரிவித்த கருத்து மிகவும்
அருமை.
மனதை கவர்ந்த முடிவை
ரசித்தமைக்கும் நன்றி.
🙏
👌👌
ReplyDelete👏
ReplyDelete