எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 11 February 2025

படித்ததில் பிடித்தவை (“துணை” – காளிங்கராயன் கவிதை)



*துணை*


“அம்மா வகைப் பாட்டிக்கு இரண்டு பெண்கள்

ஆண் மக்களோடு சேர்த்து ஆறு பேருண்டு.


மூத்தவர் டெல்லியிலிருக்கிறார்

மத்திய அரசு அலுவலராக.


அடுத்தவரொரு தோல் கம்பெனியில்

அகமதாபாத்துக் கருகே.


மூன்றாமவருக்கு மதுரை கலக்ட்ரேட்டில் பணி.


அம்மாவும் சித்தியும் ஆளுக்கொரு திக்கில் வாழ்க்கைப்பட்டனர்.


கல்யாணமாகாத கடைசி மகனோ

ஊரூராய்ச் சுற்றும்

உரவிற்பனை யதிகாரி.


வருஷத்திற் கொருமுறை

குலதெய்வக் கொடை விழாவிற்கு

குடும்பக் காரரெல்லாம் கூடிக் களிப்பார்கள்.


பாசமும் பிணக்குமாய்

அன்பும் அதட்டலுமாய் அஞ்சாரு நாட்கழியும்.


அதன் பின்னர்

அடுத்த கொடைவரைக்கும்

தாத்தாவுக்கும் பாட்டிக்கும்

துணையாயிருப்பது -


முகப்பறைச் சுவர் முழுக்க

நிறைந்திருக்கும்

போட்டோக்களும்...


மீந்து போனதை

உண்டு கிடக்கும் -

வெள்ளையன் நாயும் தான்..!”

 

*காளிங்கராயன்*

(மவ்னம், ஆறு - ஜனவரி - 1994)




32 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *காளிங்கராயன்*

    ஆரம்ப காலங்களில்
    வத்சலகுமாரன்
    எனும் புனைப் பெயரிலும்
    தற்பொழுது காளிங்கராயன்
    எனும் புனைப் பெயரிலும்
    எழுதிக் கொண்டிருக்கும்
    திரு. சுரேஷ் அவர்கள்
    தமிழ்நாடு மின்சார
    வாரியத்தில் உதவி செயற்
    பொறியாளராக பணிப்
    புரிகிறார்.

    தொண்ணூறுகளில் தொடங்கி
    தமிழின் சிற்றிதழ்களில்
    கவிதைகள், விமர்சனங்கள்,
    மொழி பெயர்ப்புகள் என
    இயங்கி வருகிறார்.

    mathangi67.blogspot.com என்ற
    வலைப்பூவில் அச்சில்
    வந்தவைகளைப்
    பதிந்து வைத்திருக்கிறார்.

    இவர் எழுதிய கவிதை
    பள்ளத்து வீடுகள்
    கணையாழி இதழில்
    எழுத்தாளர் சுஜாதா
    அவர்களால் தேர்வு
    செய்யப்பட்டு ஏப்ரல்
    1994-ல் பிரசுரிக்கப்பட்டது.

    தற்பொழுது பால்புதுமையினர்
    கவிதைகள் மற்றும்
    நேர்காணல்களைத்
    தொடர்ந்து மொழி பெயர்த்து
    வருகிறார்...

    சதங்கை
    உன்னதம்
    கனவு
    புதுவிசை
    புது எழுத்து
    யாதுமாகி
    சுந்தர சுகன்
    மவ்னம்
    வேட்கை
    கவிதாசரண்
    அம்மா (பிரான்ஸ்)
    எக்சில் (பிரான்ஸ்)
    தீராநதி (குமுதம்)
    இந்து தமிழ்திசை
    மணல்வீடு
    வெள்ளைக் குதிரை
    அணங்கு...

    போன்ற சிறுபத்திரிகைகளில்
    இவரது படைப்புகள்
    வெளிவந்து
    கொண்டிருக்கிறது.
    இறுதியாக அவற்றைத்
    தொகுத்து வெளியிடும்
    திட்டமும் உள்ளது.

    ReplyDelete
  2. அன்பும் நன்றியும் சார்..💙💙💙

    ReplyDelete
    Replies
    1. கவிதை அருமை.

      குலதெய்வம் கோவிலில்
      உறவினர்கள் வருடந்தோறும்
      சந்திப்பது இப்போது
      வழக்கமான நடைமுறையாகி
      விட்டது.

      பொருள் தேடலும்
      பணத் தேடலும்
      வெள்ளையன் நாயிக்கு
      கிடையாதுதான்.

      👏👏👌👌👏👏

      Delete
    2. உண்மைதான் சார்

      Delete
  3. அன்புள்ள ஐயா,

    இன்றைய உலகில், வேலை மற்றும் நவீன வாழ்க்கையின் தேவைகள் காரணமாக குடும்பங்கள் வெவ்வேறு இடங்களில் சிதறிக்கிடக்கின்றன. இதன் விளைவாக, குடும்ப சந்திப்புகள் அரிதாகிவிட்டன, பெரும்பாலும் வருடாந்திர கோவில் விழாக்களில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுமே.

    துரதிர்ஷ்டவசமாக, இந்த சந்தர்ப்பங்களில் கூட, சில குடும்ப உறுப்பினர்களால் கலந்து கொள்ள முடியவில்லை.

    இச்சூழலில் பெரும் நஷ்டம் அடைந்தவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் இருப்புக்காக ஏங்கித் தவிக்கும் பெற்றோர்கள். இக்கவிதை இந்த யதார்த்தத்தை அழகாகப் படம்பிடித்து இன்றைய பல குடும்பங்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது.

    நன்றி ஐயா 🙏

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா.🙏

      Delete
  4. ஶ்ரீராம்12 February 2025 at 12:03

    தனிமை-கொடுமை.

    ReplyDelete
  5. நாராயணகுமார்12 February 2025 at 12:04

    👌

    ReplyDelete
  6. யதார்த்த வாழ்க்கை

    ReplyDelete
  7. கெங்கையா12 February 2025 at 18:45

    மிக அருமை.
    நன்றி.

    ReplyDelete
  8. வெங்கடபதி12 February 2025 at 18:45

    🙏

    ReplyDelete
  9. True friend,
    Excellent.
    💐💐🌹

    ReplyDelete
  10. Reality of life, sir.

    ReplyDelete
  11. சதீஷ், விழுப்புரம்.12 February 2025 at 18:51

    🙏

    ReplyDelete
  12. மோகன்தாஸ் S12 February 2025 at 18:52

    👍

    ReplyDelete
  13. அம்மையப்பன்12 February 2025 at 18:53

    😢

    ReplyDelete
  14. தமிழ்செல்வன் R.K12 February 2025 at 18:54

    👌

    ReplyDelete
  15. பாலசுப்ரமணியன்12 February 2025 at 18:55

    👍

    ReplyDelete
  16. செல்வம் K.P12 February 2025 at 18:56

    👌

    ReplyDelete
  17. ஆறுமுகம்12 February 2025 at 18:57

    👌✍️👍

    ReplyDelete
  18. வெங்கட், வைஷ்ணவி நகர்.12 February 2025 at 18:58

    👍

    ReplyDelete
  19. காஞ்சனா G.K12 February 2025 at 18:59

    😔

    ReplyDelete
  20. ரவிசந்திரன்12 February 2025 at 19:00

    👍

    ReplyDelete
  21. ஸ்ரீதரன்12 February 2025 at 21:20

    👌

    ReplyDelete
  22. இன்றைய வாழ்க்கை நடைமுறை ... கால மாற்றங்கள்...

    ReplyDelete
  23. சுகந்தி13 February 2025 at 18:59

    👍

    ReplyDelete
  24. அருமை கவிதை
    உண்மை எதார்த்தம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. தோழமையினர் அனைவர்க்கும் நன்றி.🙏

    ReplyDelete
  26. அறிவழகன்14 February 2025 at 21:29

    திரு சுரேஷ் அவர்கள்
    எனது இனிய நண்பர்,
    படைப்பாளர்!!!
    தகவலுக்காக !!
    மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அறிவு.

      Delete